திருச்சி மாநகராட்சி சார்பில் புதிய இறகுபந்து மைதானம்
திருச்சி உய்யகொண்டான் கால்வாய் பகுதியில், ஆறுகண்ணு சாலையில் அமைந்திருக்கும் ஸ்டேட் பங்கேர்ஸ் காலனியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய இறகுபந்து மைதானம் (Badminton Court) மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான முதற்கட்ட கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது. இத்திட்டமானது பொது - தனியார் கூட்டாண்மை முறையை (Public Private Partnership mode) பின்பற்றி புதிய பூப்பந்து மைதானம் அமையவுள்ளது.
இத்திட்டத்திற்கு சுமார் 31 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் / தன்னார்வலர்கள் பங்களிப்பாக ரூபாய் 15 லட்சம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியிடம் வழக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைப்பற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்.....இந்த மைதானமானது சுமார் 1 மாதத்திற்குள் கட்டிமுடிக்கப்படும்.
இம்மைதானத்தில் பெட்டகம் அறை வசதி, கழிவறை வசதி, பார்க்கிங் வசதி ஆகிய அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளன. இந்த புதிய இறகுபந்து மைதானமானது வருகின்ற 2023 ஜனவரியில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பாக்கபடுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO