திருச்சி அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது - ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்!!

திருச்சி அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது - ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்!!

Advertisement

மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே காதலர் தினத்தில் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது – இளம்பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பழையக்கோட்டை ஊராட்சி பேச்சக்கம்பட்டியை சேர்ந்தவர் அருண்பாண்டியன்(27). கட்டிடத்தொழிலாளியான இருவருக்கு திருமணமாகி இரு கைக்குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் தவறான செல்லிடைப்பேசி எண் அழைப்பில் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளியின் (20 வயது) இளைய மகளுடன் கடந்த சில நாட்களாக சினேகிதம் கொண்டுள்ளார். 

தான் திருமணம் ஆகாத வாலிபர் என்றும், பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தில் நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அருண்பாண்டியன், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் அருண்பாண்டியன் திருமணம் ஆனவர் என்பது இளம்பெண்ணிற்கு தெரிய வர, தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நடந்தவற்றை கூற பயந்து சனிக்கிழமை இளம்பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் பெண்ணை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பின் மேல்சிகிச்சைக்காக திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெண்ணின் வாக்குமூலம் பெற்ற வையம்பட்டி போலீஸார், ஞாயிற்றுக்கிழமை அருண்பாண்டியனை கைது செய்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். குற்றவியல் நீதிபதி கே.செந்தில்குமார், வருகின்ற பிப் – 26ஆம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவிட்டதையடுத்து அருண்பாண்டியன் முசிறி கிளைச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

Advertisement