சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாவட்ட எஸ்பி தலைமையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணி - பள்ளி, கல்லூரி குழந்தைகள் உட்பட 500 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு நடைப்பயண்த்தில் பங்கேற்ற எஸ் பி செல்வ நாகரத்தினம் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் பேரணியானது எஸ் பி செலவ் நாகரத்தினம் வழிகாட்டுதலின் படி பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை எதிர்கொள்ளும் விதமாக உள்ள வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானவில் நடைபயணம் தொடங்கி

திருச்சி சென்னை சாலை வழியாக மாருதி நகர் சென்று பின்னர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் நடைபயணம் நடைபெற்ற பேரணி நம்பர் ஒன் டோல்கேட் ஒய் ரோடு சாலையில் நிறைவடைந்தது. விழிப்புணர்வு கலந்து கொண்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உலக மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த எஸ்பி பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் மோர் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற பெண்களிடம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பேசுகையில் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நடைபெறும் பாலியல் தொந்தரவு ,குற்றச் சம்பவங்களுக்கு சட்டரீதியான ஆலோசனை மற்றும் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்த சில வழிமுறைகள் மற்றும் குற்ற தடுப்பு குறித்து சட்ட விழிப்புணர்வுகளை எடுத்துரைத்தார்.தொடர்ந்து பெண்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் விதி முறைகள் மற்றும் அவசர காலத்தில் காவல்துறையை அனுக செல்போனில் காவல் அப்ளிகேஷன் பெண்கள் கட்டாயம் பதிவிறக்கம் செய்து வலியுறுத்தி பேரணியை நிறைவு செய்தார்.

இந்த சர்வதேச மகளிர் தின பேரணி நிகழ்வில் பள்ளி கல்லூரி மாணவிகள் ,பெண்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என 500 க்கும் மேற்பட்ட கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

 திருச்சி விஷம் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

 திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision