தொட்டியம் கொலை வழக்கு-குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை

தொட்டியம் கொலை வழக்கு-குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நவதிப் கடந்த 25/4/2025-ஆம் தேதி மாலை அவரது சித்தப்பா மகன் ரோகித் ஆகியோர் வீட்டிற்கு முன்பு  பேசிக் கொண்டிருந்ததாகவும்

அப்போது திருவேங்கமலையைச் சேர்ந்த வேல்முருகன்   இன்பரசு மற்றும் நவீன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் வந்து குடிக்க தண்ணீர் கேட்டதாகவும் அவர்கள் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பின்னர் அங்கிருந்து சென்று விட்டதாகவும்

மீண்டும் 9:30 மணி அளவில் வேல்முருகன் இன்பரசு மற்றும் நவீன் ஆகியோர் சத்யா சரவணன் சசி மற்றும் கரண் ஆகிய நான்கு பேரை அழைத்து வந்து தகராறு செய்து ஆயுதங்களால் தாக்கியதில் சுப்பிரமணி குமார் சந்துரு போஸ் ஆகியோர்களுக்கு குத்து காயங்களும் வெட்டுக்காயங்களும் ஏற்பட்டு தொட்டியம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில்

அதில் சுப்பிரமணியன் இறந்து விட்டதாகவும் மேலும் மேல் சிகிச்சைக்காக குமார் நாமக்கல் அரசு மருத்துவமனையிலும் சந்துரு திருச்சி ரம்யா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதற்கிடையில் இச்சம்பவிடத்திலிருந்து இரு சக்கர வாகனத்தின் மூலம் தப்பிச் சென்றனர் சம்பவம் தொடர்பாக நபதீப் கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் காவல் நிலையத்தில் வேல்முருகன் மற்றும் 6 நபர்கள் மேல் வழக்குப் பதியப்பட்டு உள்ளது.

 வேல்முருகன் இன்பரசு நவீன் சரவணன் பழனியாண்டி கரண் சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மீதமுள்ள சத்தியா பழனியாண்டி என்பவரை விரைந்து கைது செய்ய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வரத்தினம் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மூன்று தனிப்படைகள்  அமைத்து தேடி வருகின்றனர். கிராமத்தில் காவல் பாதுகாப்பு பணி ஏற்படுத்தப்பட்டு நிலமையை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 சம்பவம் குறித்து பொய்யான தகவல்களையோ உறுதி செய்யப்படாத தகவல்களையோ யாரும் பரப்ப வேண்டாம் என்று திருச்சி காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision