சாப்பாடு ஊட்டியபோது மூச்சுத் திணறல்-மூன்று வயது சிறுவன் பலி

திருவெறும்பூர் அருகே தாய் இரண்டாவது பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாப்பாடு ஊட்டியபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூன்று வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் கனகலிங்கம் இவரது மகன் கார்த்திக் (35) இவரது மனைவி தாரணி (30)என்பவரை கார்த்திக் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இவர்களுக்கு சைலேஷ் (3)என்ற மகன் இருந்த நிலையில் தாரணி இரண்டாவது பிரசவத்திற்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.அதனால் கார்த்திக் மனைவியுடன் மருத்துவமனையில் உள்ளார்.
இந்நிலையில் சைலேஷ் தாத்தா பாட்டியுடன் வீட்டில் இருந்துள்ளான் அப்பொழுது நேற்று கார்த்திக்கின் தங்கை அட்சயா ஸ்ரீ சைலேஷிற்கு உணவு ஊட்டியதாக கூறப்படுகிறது.அப்போது சைலேஷ்க்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே சைலேஷை பக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்
பின்னர் மேற் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு சைலேஷை பறிசோதித்த மருத்துவர்கள் சைலேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்
அதன் அடிப்படையில் கார்த்திக் இச்சாம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.அதன் அப்படையில் சைலேஷின் உடலை திருவெறும்பூர் போலீசார் கைப்பற்றிபிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் அப்பகுதிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision