டிஎன்டி சான்றிதழ் பெற்றுத் தந்தால் 2 கோடி மக்களின் ஓட்டு அதிமுகவிற்கு... அய்யாகண்ணு திருச்சியில் பேட்டி!
Advertisement
மத்திய அரசு OBC வகுப்பினருக்கு வழங்கிய 27 சதவிகித இடஒதுக்கீட்டில் 9 சதவீதம்
பூர்வகுடியினருக்கு வழங்க வேண்டும், டிஎன்டி சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் 68 சாதிப்பிரிவினை சேர்ந்த பழங்குடி சீர்மரபினர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதியை அவரது வீட்டில் சந்தித்து மனு அளித்தனர்.
Advertisement
1979 இல் தமிழக அரசு தமிழகத்தில் பழங்குடி சீர் மரபினர் (DNT) என்பதை சீர்மரபினர் சாதிகள் (DNC)என பெயர் மாற்றம் செய்தது.பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு சீர்மரபினர் சாதிகள் டிஎன்சி என்பதை நீக்கி பழங்குடிகள் டிஎன்டி என மாற்றப்பட்டது.
Advertisement
அதிலும் மத்திய அரசு சலுகைகள் பெற மட்டுமே பழங்குடி சீர்மரபினர் டிஎன்டி சான்றிதல் செல்லும், மாநில அரசில் சீர்மரபினர் சாதிகள் டிஎன்சி என தொடர்வார்கள் என அறிவித்தது.
எனவே டிஎன்டி சான்றிதழ் வழங்க வழிவகை செய்யும் அமைச்சராகிய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி வீட்டில் அய்யாக்கண்ணு தலைமையில் சந்தித்து பழங்குடி சீர்மரபினர் பற்றி பலமுறை சட்ட கருத்துகள் கேட்கப்பட்டுதான், டி என் டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
எனவே 68 சாதியை சார்ந்த 2 கோடி மக்களை காப்பாற்ற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நலத்துறை அமைச்சர் வளர்மதி உடனடி நடவடிக்கை மேற்கொண்டு டிஎன்டி என்ற ஒரே சான்றிதழ் வழங்க வேண்டும் என அய்யாக்கண்ணு தலைமையில் 68 சாதிப்பிரிவினை சேர்ந்தவர்கள் அமைச்சர் வளர்மதியை சந்தித்து மனு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு...
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி டிஎன்டி என்ற ஒரே சான்றிதழ் பெற்று தர வழிவகை செய்தால், 68 சாதியினரின் 2 கோடி வாக்குகளும் தங்களுக்கு கிடைக்கும், இல்லையெனில் நாங்கள் எதிர்த்து வாக்களிப்போம் என தெரிவித்தார்.