லால்குடி அருகே கோயில் திருவிழா நடத்துவதில் இரு சமூகத்தினரிடையே மோதல் - கல்வீச்சு - பதட்டம் 

லால்குடி அருகே கோயில் திருவிழா நடத்துவதில் இரு சமூகத்தினரிடையே மோதல் - கல்வீச்சு - பதட்டம் 

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அன்பில்அருகே ஜங்கராஜபுரம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஆச்சிராமவள்ளியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இக் கோயிலின் செயல் அலுவலராக சசிகலா வும்,தக்கராக மனோகர் பணியாற்றி வருகின்றனர்.  
         

இக் கோயிலின் மாசி மாத கட்டுத் தேர் திருவிழா ஆண்டுதோறும் மார்ச் மாதம்  நடைபெறும். அப்போது கட்டுத்தேர் சுவாமி புறப்பாடு ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லாமல் பாரம்பரிய முறைப்படி சென்று வந்தது.  இது தொடர்பாக ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் சுவாமி புறப்பாடு நடைபெற வேண்டுமென ஆதிதிராவிட ( தேவேந்திரகுல வேளாளர் ) மக்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம்  புகார் அளித்தனர். அதனடிப்படையில் இந்தாண்டு திருவிழா நடத்துவதில் இருதரப்பினரிடமும் திருவிழா சம்மந்தமாக ஒருமித்த கருத்து ஏற்படாததால் , சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உள்ளதாலும், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் , மனுதாரர் கோரிக்கை குறித்து பொது அறிவிப்பு செய்து, மக்கள் ஆலோசனை,ஆட்சேபனை பெற்று கோரிக்கைகளை பரிசீலனை செய்து தக்கார் தீர்மானம் இயற்றி முடிவு செய்யலாம் என உத்தரவிட்டு இருந்தனர்.

திருவிழா நடத்துவது குறித்து முடிவு செய்ய போதிய கால அவகாசம் இல்லாத தாலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் இந்தாண்டு திருவிழா நிறுத்தி வைக்கபடுகிறதென கோயில் செயல் அலுவலர் கடந்த பிப்ரவரி 23ம் தேதி உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து இருதரப்பினரும் திருவிழா தொடர்பாக எவ்வித முனைப்பும் காட்டாத நிலையில் கோயிலின் தக்கார் மனோகர் கடந்த நடைமுறைப்படி திருவிழா நடைபெறுமென கடந்த  பிப்ரவரி 26 ம் தேதி யில் பிறபித்த உத்தரவினை மார்ச் 1 ம் தேதி தேவேந்திரகுல வேளாளர் மக்களான எங்களுக்கு வழங்கி ஒரு தலைபட்சமாக  தக்கர் மனோகர் செயல்படுவதாக கூறி் ஆதிதிராவிட பகுதியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த மார்ச் 2 ம் தேதி லால்குடி ரவுண்டானா பகுதியில் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதனால் திருச்சி சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வட்டாட்சியர் சித்ரா போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சனம் விடம் தக்கார் மீது நடவடிக்கைகள் எடுக்கவும், சாதி பாகுபாடு்இன்றி திருவிழா நடத்திடவேண்டுமென மனு வழங்கினர் தேவேந்திர குல வேளாளர் மக்கள்.இந்நிலையில் மீண்டும் திருவிழா நடத்தும் வேளையில் மற்றொரு சாதியினர் ஈடுபட்டனர். 

எங்கள் பகுதிக்கும் சாமி வந்து செல்லவில்லையெனில் திருவிழா நடத்த கூடாதென எதிர்ப்பு தெரிவித்து பட்டியல் இனமக்கள் கோயிலின் முன் இரவு முழுவதும் 600 க்கும் மேற்பட்டோர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை திருவிழா நடைபெறாது எனக் கூறவும், மற்றொரு சமுதாயத்தினர் திருச்சி செங்கரையூர் சாலையில் போராட்டம் நடத்தினர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர். இது தொடர்பாக பட்டியல் இன மக்கள் 10 பேரை லால்குடி போலீஸார் கைது செய்தனர்.மேலும் சிலரை கைது செய்ய வீடு, வீடாக  போலீஸார் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  இப்பகுதியில் கலவரம், பதட்டம் ஏற்படாத வகையில் 500 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I