திருச்சி சீனிவாசநகரில் குவிந்து கிடக்கும் குப்பை - சொந்த செலவில் அப்புறப்படுத்திய பகுதிவாசிகள் - என்ன செய்கிறது மாநகராட்சி?

திருச்சி சீனிவாசநகரில் குவிந்து கிடக்கும் குப்பை - சொந்த செலவில் அப்புறப்படுத்திய பகுதிவாசிகள் - என்ன செய்கிறது மாநகராட்சி?

திருச்சி மாநகரம் என்பது தமிழகத்தின் மையப் பகுதியாக இருந்து வருகிறது. இங்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல பயணிகள் வந்து செல்கின்றனர். ஆரம்பத்தில் தூய்மை நகரங்களில் இரண்டாவது இடத்தில் இருந்த திருச்சி நாளடைவில் பின்னுக்கு தள்ளியே சென்று கொண்டிருக்கிறது.

Advertisement

திருச்சி மாநகராட்சியின் பல பகுதிகளில் குப்பைகள் தேங்கியும், கழிவுநீர் சாலையில் கலந்து வருவதும், பல பகுதிகளில் வீடுகளில் சென்று குப்பையை சேகரிக்காமல் இருப்பதால் பகுதிவாசிகள் சாலையோரங்களில் குப்பையை போட்டு செல்கின்றனர். கொரோனா ஒருபுறம் இருந்தாலும் மாநகராட்சி கண்டுகொள்ளாததால் பொதுமக்களால் வீசப்படும் குப்பைகளால் வரும் நோய்தொற்று என்பது அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது.

திருச்சியில் கோவில்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையம் பல இடங்களில் குப்பைகள் தேங்கி இருப்பதால் திருச்சிக்கு வரும் பல பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வயலூர் ரோடு சீனிவாச நகர் 8வது தெருவில் தேங்கி நிற்கும் குப்பைகளை சொந்த செலவில் அப்பகுதி மக்கள் அகற்றிய அவல சம்பவம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சீனிவாச நகர் 8வது தெருவில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இநநிலையில் வயலூர் ரோட்டில் இருந்து 8வது தெருவில் செல்லும் ரோட்டில் அப்பகுதி குப்பைகளே கொட்டப்படுவதால் அதனை சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் நோய் தொற்று பரவும் அபாயத்தை தினந்தோறும் கடந்து வருகின்றன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்களே சொந்த செலவில் குப்பைகளை அகற்றி வேலியும் அமைத்தனர்.

சுமார் இதுவரை 25,000 ரூபாய்க்கு மேல் செலவழித்தும் அப்பகுதியில் உள்ள மக்கள் அதையும் மீறி அதே பகுதியில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதற்கு உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்து தகுந்த தீர்வு கிடைக்க வேண்டுமென்றும், தினம்தோறும் குப்பைகளை அப்பகுதி மக்களிடம் பெற வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இனிமேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் போல....

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I