நாகையநல்லூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி முருகன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

நாகையநல்லூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி முருகன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

திருச்சி அருகே நாகையநல்லூர் மேல தெரு ஸ்ரீ பாலா தண்டாயுதபாணி முருகன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 2000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம்.

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் காட்டுப்புத்தூர் அருகே நாகையநல்லூர் மேல தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் திருக்கோவிலில்வியாழக்கிழமை கணபதி ஹோமம் செய்து வெள்ளிக்கிழமை முருகப்பெருமானின் ஆறுபடை தீர்த்தம் எடுத்து வந்தனர்

 வெள்ளிக்கிழமை ஸ்ரீராம சமுத்திரம் காவிரி ஆற்றில் சென்று அங்கு பக்தர்கள் பொதுமக்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர் பின்பு சனிக்கிழமை கணபதி வழிபாடு கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் நவக்கிரக ஹோமம் தொடர்ந்து மங்கல இசையுடன் முதல் யாகசாலை பூஜை நடைபெற்று மாலை இரண்டாம் கால பூஜை நடைபெற்றது

 மூன்றாம் கால பூஜை நடைபெற்ற முடிந்து கோபூஜை உயிர்களை சக்தி ஊட்டுதல் பூர்ண ஹீதி தீபாராதனை நடைபெற்ற கடம்புறப்பாடு செய்து கோபுர கலசத்திற்கு சிவ ஸ்ரீ சிவ விநாயகமூர்த்தி சிவாச்சியர்கள் தலைமையில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றதுபாலா தண்டாதபாணி முருகன் . கோவில் இடும்பன் கோவில் மயில் வாகனம் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதுநிகழ்வில் ஸ்ரீ பாலா தண்டாயுதபாணி குடி பாட்டு மக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

 விழாவிற்கான ஏற்பாட்டினை நாகையநல்லூர் மேல தெரு ஸ்ரீ பால தண்டாதபாணி திருக்கோவில் பங்காளிகள் ஏற்பாடு செய்தனர்ஸ்ரீ பாலா தண்டபாணி முருகன் கோவில் கும்பாபிஷேவில் கலந்து கொண்ட பக்தர்கள் பொது மக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கினர்பாதுகாப்பான ஏற்பாடுகளை காட்டுப்புத்தூர் உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision