திருச்சி முசிரி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என தொலைபேசி அழைப்பு-சோதனை

திருச்சி முசிரி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என தொலைபேசி அழைப்பு-சோதனை

திருச்சி மாவட்டம் முசிரி புதிய பேருந்து நிலையத்திற்குள் வெடிகுண்டு இருப்பதாகவும், அந்த வெடிகுண்டு இன்று மதியம் வெடிக்கப் போவதாகவும் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம ஆசாமி ஒருவர் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்ததையடுத்து முசிரி காவல் துணை கண்காணிப்பாளர் அருள்மணி  தலைமையிலான காவல்துறையினர் பேருந்து நிலையத்திற்குள் இருந்த பயணிகளை வெளியேற்றினர், மேலும் பேருந்து நிலையத்திற்குள் உள்ள கடைகள் மூடப்பட்டன.

பேருந்துகள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை திருச்சியிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் காவல் உதவி ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலான தனிப்படை மற்றும் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு பேருந்து நிலையம் முழுக்க சோதனை நடைபெற்றது. ஆனால் வெடிகுண்டு சம்பந்தமான பொருட்கள் ஏதும் கைப்பற்ற படவில்லை. இதனால் முசிரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் பொய்யான தகவலை காவல்துறைக்கு தெரிவித்த நபரை தேடி வருகின்றனர். அவரை கண்டறிந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் அருள்மணி தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision