இன்றே கடைசி போனால் வராது மாத்திடுங்கள்

இன்றே கடைசி போனால் வராது மாத்திடுங்கள்

ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவதற்கான கடைசி நாள் இன்றுடன் (அக்.,07) முடிவடையும் நிலையில், இதுவரை 87 சதவிகித நோட்டுகள் திரும்பி வந்துள்ளன என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். இன்னும் ரூபாய் 12 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.

நாடு முழுதும் புழக்கத்தில் இருந்த, '500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, 2016 நவம்பரில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பணப்புழக்கத்தை சமாளிக்கும் வகையில், புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக, கடந்த ஆண்டு மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.

முதலில் செப்டம்பர் 30ம் தேதி வரை அந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்தலாம் என்றும், அதுவரை இந்த நோட்டுகள் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளவும், வங்கிக் கணக்கில் செலுத்தவும் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் அதாவது இன்றோடு 7ம் தேதி வரை அதை நீட்டித்து, ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், மும்பையில் நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியபொழுது புழக்கத்தில் இருந்த ரூபாய் 3.43 லட்சம் கோடியில், 87 சதவிகித 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துவிட்டது. இன்னும் ரூபாய் 12 ஆயிரம் கோடி மதிப்பு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பவில்லை. என்று தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision