உய்யக்கொண்டான் கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்.

உய்யக்கொண்டான் கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்.

உய்யக்கொண்டான் கால்வாய் தூர்வாரும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதிக அளவு கழிவுகள் கொட்டப்படுவதால் கழிவுகளில் வளரும் களைகள் மற்றும் நீர்வாழ் தாவரங்கள் அதிக அளவு உய்யக்கொண்டான் கால்வாயில் வளர்ந்துள்ளதால் கால்வாய் மூலம் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் உள்ள வயல்வெளிகளுக்கு  பாசன நீர்வரத்து குறைந்து வருகிறது.  

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்... மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உய்யக்கொண்டான் கால்வாய் தூர்வாரும் பணிக்காக 7 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு உய்யக்கொண்டான் கால்வாயில் தூர்வாரும் பணி நடைபெற்றது. தொடர்ந்து 2019ஆம் ஆண்டு 8 லட்சம் மற்றும் 2020ல் ரூபாய் 9 லட்சம் செலவில் தூர்வாரும் பணிக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது. 

உய்யகொண்டான் கால்வாயில் கலக்கப்படும் கழிவுகளும், மக்களால் கொட்டப்படும் கழிவுகள் குறிப்பாக அண்ணாநகர், ஆழ்வார்தோப்பு மற்றும் திருவெறும்பூர் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் அதிகளவு கழிவுகளில் வளரும் களைகள் மற்றும் நீர் தாவரங்கள் வளர்வதற்கான காரணிகளாக அமைகின்றன. 

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் அடுத்த மாதம் திறந்துவிட இருக்கும் நிலையில்  உய்யக்கொண்டான் கால்வாய் தூர்வாரும் பணியை தொடங்கியுள்ளோம். தூர்வாரும் பணியால் உய்யக்கொண்டான் கால்வாய்  மூலமாக 32 ஆயிரம் ஏக்கர் வேளாண் நிலங்கள் பயனடையும். 

கழிவுநீர் கால்வாயில் கலப்பதை கட்டுபடுத்தாத வரை களைகள் வளர்வது அதிகரித்துக்கொண்டே இருக்கும். களைகளை நீக்குவதற்கான பணியில் ஈடுபட்டுள்ள வேலையாட்கள் கூலி இயந்திரங்களின் எரிபொருளின் செலவுகள் அதிகமாகின்றன. பராமரிப்பு பணியில் 8 வேலையாட்கள் ஈடுப்பட்டுள்ளனர். வேலையை துரிதப்படுத்த அதிகளவு இயந்திரங்களையும் பயன்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளோம்.

அதிகளவிலான களைகள் இருப்பதால் இந்த பணிகள் முடிவடைவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகலாம் என்றும், பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC