திருச்சியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க சென்ற போலீஸ்யை கடித்து குதறிய நாய்

திருச்சியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க சென்ற போலீஸ்யை கடித்து குதறிய நாய்

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து உள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ராம்ஜி நகர் ஆய்வாளர் வீரமணி தலைமையிலான போலீசார் திருச்சிக்கு கஞ்சாவை விற்பனை செய்யும் கமல் என்பவரை பிடிப்பதற்கு அவர் வீட்டுக்கு சென்றனர். அவர் வீட்டின் நேரடியாக செல்லாமல் சுவர் ஏறி குதிக்கும் பொழுது போலீஸ்காரர் ரவி என்பவரை கமல் வளர்த்த நாய் கடித்து விட்டது .

கமல் தப்பி ஓடி விட்டார். ராம்ஜி நகர் முழுவதும் தினமும் கிலோ கணக்கில் கஞ்சாவை இறக்கி விற்பனை செய்பவர் என்பது தற்போது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 30 கிலோ கஞ்சா இவருக்கு நேரடியாக வருவதாகவும் அந்த கஞ்சாவை பல பெண்களிடம் கொடுத்து விற்பனை செய்வதாகவும் தற்பொழுது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினமும் 30 கிலோ என்றால் திருச்சி மாநகரில் எவ்வளவு கிலோ கஞ்சா விற்பனையாகும் என்பதை கணக்கீட்டு பார்த்தால் ..... கஞ்சா போதை விட தலை சுற்றும்.வேண்டுமென்றே கமல் தன்னை பிடிக்க வரும் காவல்துறையினரை வெளிநாட்டு வகை நாய்களை வைத்து கடிக்க பயிற்சி கொடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO