துறையூர் அருகே கோவிலுக்கு சென்ற வேன் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

துறையூர் அருகே கோவிலுக்கு சென்ற வேன் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

துறையூர் அருகே கோவிலுக்கு சென்ற வேன் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து 13 பேர் காயம், துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை, போலீசார் விசாரணை..

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பச்சைமலை வண்ணாடு ஊராட்சிக்குட்பட்ட நெசக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கீழக்கரையிலுள்ள சிவன் கோவிலில் திருவிழா நடைபெறுவதால் இதனை தொடர்ந்துநெசக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து பிக்கப் வேனில் கோவிலுக்கு செல்வதாக முடிவு செய்து இன்று கோவிலுக்கு சென்றுள்ளனர், 

கோவிலுக்கு செல்லும் பொழுது வல்லம் பகுதியில் பிக்கப் லோடு வேன் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது, வேன் கவிழ்ந்ததில் வேனில் சென்ற நெசக்குளத்தைச் சேர்ந்த கௌசல்யா, கார்த்திக், அஜித், லட்சுமி, கருப்புசாமி, மாணிக்கம், இந்திராணி, ராஜேஸ்வரி, வெள்ளையம்மாள் உள்ளிட்ட 13 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது, அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு

மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர், விபத்து குறித்து துறையூர் ஆய்வாளர் முத்தையா விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், கோவிலுக்குச் சென்ற பொழுது வேன் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision