திருச்சி மாநகர காவல்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி!!

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி!!

திருச்சி மாநகர காவல் இணைந்து நடத்தும் மினி மாரத்தான் ஓட்டம் வருகிற 14.02.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 06.00 மணிக்கு நடைபெற உள்ளது.

Advertisement

இத்தொடர் ஓட்டமானது இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடத்தப்படுகிறது.

Advertisement

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். தங்களது வருகையைப் பதிவு செய்ய குறிப்பிட்ட ( http://bit.ly/tcp-marathon ) http://bit.ly/tcp-marathon கூகுள்் படிவத்தைக் கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும்.

தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டு 5 கிலோமீட்டர் தூரத்தை ஓடிக்கடந்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

இத்தொடர் ஓட்டத்தை திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்து வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்க உள்ளார்கள்.

சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத பணியில் கலந்து கொள்ள திருச்சி மாநகர காவல் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.