கார் வாங்கித் தருவதாக 16 லட்சம் மோசடி - சுற்றி வளைத்து பிடித்த திருச்சி காவல்துறை!

கார் வாங்கித் தருவதாக 16 லட்சம் மோசடி - சுற்றி வளைத்து பிடித்த திருச்சி காவல்துறை!

கார் வாங்கித்தருவதாக ஏமாற்றி 16 லட்சம் வாங்கிக்கொண்டு மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு திருச்சி காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

Advertisement

திருச்சி மாவட்டம், ‌BHEL கைலாசபுரத்தைச் சேர்ந்த அப்புராஜா என்பவர் தனது தேவைக்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு (02.07.2018) கார் கேட்டு மன்னார்புரத்தில் உள்ள மெக்கானிக் குமாரவேல் என்பவரை அனுகியதில் கேரளாவைச் சேர்ந்த கமல் நடராஜன் என்பவரை அப்புராஜாவிற்கு அறிமுகப்படுத்தியதில் ரூபாய். 8,50,000/- பணத்தை பெற்றுக் கொண்டு SCORPIO (Second hand) காரை வாங்கி கொடுத்துள்ளார். 

இந்த காரில் இயந்திர கோளாறு ஏற்பட்ட காரணத்தால் மேற்படி காரை மாற்றித் தரும்படி அப்புராஜா கேட்டுக் கொண்டதால் காரை பெற்றுக் கொண்டு மாற்றுக் கார் வாங்கி கொடுப்பதாக தெரிவித்து அதற்காக மேலும் 8,00,000 பணத்தை பெற்றுக் கொண்டு, மாற்றுக் கார் வாங்கி கொடுக்காமலும் , பணத்தை திரும்ப கொடுக்காமலும், கமல் நடராஜன் ஏமாற்றி தலைமறைவாகிவிட்டார்.

இது தொடர்பாக அப்புராஜா திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவின் படி கடந்த வருடம் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் ரவிக்குமார் புலன் விசாரணை மேற்கொண்டு எதிரி கமல் நடராஜனை கேரளா, ஈரோடு, சென்னை ஆகிய இடங்களில் காவல் ஆளிநர்களுடன் தேடி இறுதியாக இந்த மாதம் 14ம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் வைத்து கமல் நடராஜனை கைது செய்தனர். மேலும் மோசடி செய்த பணத்தில் வாங்கிய 3,50,000 மதிப்புள்ள Datson grey colour car கைப்பற்றபட்டும், வழக்கின் சம்பந்தப்பட்ட சொத்தை கைப்பற்றுவது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.