குரூப்-4 தேர்வு – மாற்றுத்திறனாளி தேர்வாளருக்கு உதவிய காவலர்கள்

குரூப்-4 தேர்வு – மாற்றுத்திறனாளி தேர்வாளருக்கு உதவிய காவலர்கள்

தமிழக அரசுத்துறைகளில் உள்ள ஜுனியர் அசிஸ்டென்ட், விஏஓ, பில்கலெக்டர் உள்ளிட்ட 7ஆயிரத்து 301 காலிஇடங்களை நிரப்புதற்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-4 தேர்வு இன்றையதினம் காலை தொடங்கியது.

திருச்சி மாவட்டத்தில் 320 தேர்வு மையங்களில் 94 ஆயிரத்து 140பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து தேர்வினை எழுதினர்.  மேலும் தேர்வர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேநேரம் தேர்வுமையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித வசதியும் செய்துதரப்படாததால் அவர்கள் மிகுந்த சிரமதிற்கு ஆளாகினர்.

குறிப்பாக மணப்பாறையைச் சேர்ந்த சரஸ்வதி என்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வீல்சேர் வழங்கப்படாததால் சிரமப்பட்டு முட்க்காலில் வந்த பெண்ணை காவல்உதவிஆய்வாளர் அகிலா மற்றும் ஊர்க்காவல்படை பெண் போலீஸ் இணைந்து தூக்கிச்சென்று தேர்வு மையத்தில் இறக்கிவிட்டதை பலரும் பாராட்டினர்.

அதேநேரம் இதுபோன்ற தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிய வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டுமெனவும் பெற்றோர்கள் கேட்டுக்கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO