திருச்சியில் திமுகவின் 11வது மாநில மாநாடு பணி - ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்!!

திருச்சியில் திமுகவின் 11வது மாநில மாநாடு பணி - ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்!!

Advertisement

திருச்சி சிறுகனூரில் திமுகவின் 11வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மாநாட்டிற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Advertisement

மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்த விவரங்களை வரைபடத்தின் உதவியுடன் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, ஸ்டாலினிடம் விளக்கினார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  வைரமணி, எம்எல்ஏக்கள்
செந்தில் பாலாஜி, லால்குடி செளந்திர பாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார், மாநகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1996 ,2006, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டுகளுக்கு பிறகு 4 வது முறையாக  தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சிராப்பள்ளியில் 11வது மாநில மாநாடு நடைபெற இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. திருச்சி - சென்னை ரோட்டில் சிறுகனூர் பகுதியில் 300 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மாநாடு நடைபெறும் தேதி குறித்து செய்தியாளர்கள் கேட்க முற்பட்டபோது ஸ்டாலின் அதற்கு பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றார்