சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைத்த திருவெறும்பூர் எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழி!
திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...
Advertisement
அதிமுகாவை நிராகரிப்போம் என்ற இந்த முன்னெடுப்பை தமிழகம் முழுதும் திமுகவினர் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் மட்டும் 124 இடங்களில் கிராம சபை கூட்டம் நடத்தி உள்ளோம். இதில் 1 கோடி பேர் அதிமுகாவை நிராகரிப்போம் என்று கையெழுத்து போட்டுள்ளனர். நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்து உள்ளோம்.
Advertisement
பெண்களிடம் இருந்து பெறப்பட்ட ஒவ்வொரு மனுவும் முக்கியமானது எனவே கிராமம் வாரியாக பிரச்சனைகளை சேகரித்து அதனை ஆவணப்படுத்தி தலைமையிடம் கொடுத்து அதனை சரி செய்ய திமுக தயாராகி வருகிறது. திருவெறும்பூர் உள்ளிட்ட பல இடங்களை நேரில் ஆய்வு செய்து பயிர் பாதிக்கப்பட்ட இடங்களை கணக்கிட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளோம். பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க முயற்சி செய்துள்ளனர். பொதுவாக மாநாடு தொடங்குவதற்கு முன்பு பூஜை போடுவது முதன்மை செயலாளர் கே.என்.நேரு வின் சென்டிமென்டான விஷயம். சிறுகனூரில் நடைபெறள்ள மாநாடு பணிகள் தொடக்க விழா நடந்த பகுதியின் மாவட்ட செயலாளர், நேருவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Advertisement
அதன் அடிப்படையில் அவர் கலந்து கொண்டார். அது கட்சி நிகழ்ச்சியில்லை என்பதால் நான் கலந்து கொள்ளவில்லை. இதில் வேறு எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது என்றார். தலைவர் எங்கு கை காட்டுகிறாரோ அங்கு நான் போட்டியிடுவேன். சாலை பணிக்கான நிதி ஒதுக்குவது குறித்து நானும் வலியுறுத்தி உள்ளேன். அண்ணன் பா.குமாரும் வலியுறுத்தி உள்ளார். யார் கூறினால் என்ன அரசு மக்களுக்கு தான் செய்யபோகிறது என்று கூறினார்.