வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 589 காளைகள் - 39 பேர் காயம் - நிறைவு பெற்ற திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு!!

வாடிவாசலில் சீறிப்பாய்ந்த 589 காளைகள் - 39 பேர் காயம் - நிறைவு பெற்ற திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு!!

Advertisement

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர் அடுத்து சூரியூரில் பொங்கலுக்கு அடுத்த நாள் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு திருச்சி மாவட்டம் சூரியூர், ஆவாரங்காடு பொத்தமேட்டுப்பட்டி இருங்களூர் ஆகிய நான்கு இடங்களிலிருந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக அனுமதி கேட்டிருந்தனர். 

Advertisement

ஆனால் இந்த மாதத்தில் திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி மட்டுமே கடந்த 15ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தொடர் மழையின் காரணமாக சூரியூர் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டியினர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டியை தள்ளிவைப்பது என்றும், மாற்று ஏற்பாடாக வரும் இன்று நடத்துவது என்றும் முடிவெடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அனுமதி பெற்றனர்.

இந்த வருடம் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 550க்கும் மேற்பட்ட காளைகள் வரும் என்றும், 450க்கும் மேற்பட்ட மாடுபிடி வருவார்கள் பங்கேற்றுள்ளனர்.

Advertisement

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு வாடிவாசலில் அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் மாடிபிடி வீரர்கள் 450 வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு பின்பு வாடிவாசலில்  களமிறங்கியது.

இதில் மொத்தம் 589 காளைகள் வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் 369 ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.

இதுவரை 39 பேருக்கு காயம். இதில் படுகாயமடைந்த 4 பேரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் சிவா என்ற மாடுபிடி வீரர் 16 காளைகளை அடக்கி முதல் பரிசு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. சிறந்த ஜல்லிக்கட்டு காளையாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு காளை தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.