மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்  ஆட்சியர் தகவல்

மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்  ஆட்சியர் தகவல்

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக கல்வி பயிலும் உடலியக்க குறைப்பாடுடையோர், பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு ரூ.1000, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3000, 9-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு ரூ.4000, இளங்கலை மற்றும் பட்டயப்படிப்பு பயில்பவர்களுக்கு ரூ.6000, முதுகலை பட்டம் பயில்பவர்களுக்கு ரூ.7000 என கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. 

மேலும் பார்வையற்றோருக்கு கல்வி உதவித் தொகையுடன் வாசிப்பாளர் உதவித் தொகையாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு ரூ.3000, இளங்கலை பட்டம் ரூ.5000 மற்றும் முதுகலைப் பட்டம் பயில்பவர்களுக்கு ரூ.6000 சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது.

தகுதியுள்ள கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மற்றும் மாணவியர் திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட், மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம், அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பப் படிவம் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் கல்வி பயிலும் நிறுவனத்திடமிருந்து சான்றொப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், தனித்துவ அடையாள அட்டையின் நகல் (UDID), 9-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயில்பவராக இருந்தால் கடந்த ஆண்டின் மதிப்பெண் சான்று நகல், வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு இணைத்து சமர்பிக்கவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 0431- 2412590-ல் தொடர்பு கொள்ளலாம் என்றும் இந்த கல்வி ஆண்டிற்கான உதவிதொகை  பெற உரிய ஆவணங்களோடு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு அறிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU