திருச்சி அருகே 2016 ஆண்டில் நடந்த வெடி தொழிற்சாலை விபத்து 19 பேர் பலி - 4 பேரை விடுக்க மனு - நீதிமன்றத்தில் காரசார விவாதம்

திருச்சி அருகே 2016 ஆண்டில் நடந்த வெடி தொழிற்சாலை விபத்து 19 பேர் பலி - 4 பேரை விடுக்க மனு - நீதிமன்றத்தில் காரசார விவாதம்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முருங்கப்பட்டியில் வெற்றிவேல் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் என்ற தனியார் வெடிமருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள ஒரு அலகில், கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி பயங்கர விபத்து ஏற்பட்டது. 

இதில் கட்டிடம் தரைமட்டமானதுடன், அங்கு பணியாற்றிய பலர் இடிபாட்டில் சிக்கியும், உடல் சிதறியும் 19 பேர் பலியாகினர். இந்த வெடி விபத்து குறித்து உப்பிலியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், வெடிபொருள் தயாரிப்பு நிறுவன உரிமையாளரான விஜயக்கண்ணன், மேலாளர்கள் பிரகாசம், ராஜகோபால், பாதுகாப்புப் பிரிவு மேலாளர் ஆனந்தன் உட்பட 4 பேர் மீது 304(2), இந்திய வெடிபொருள் சட்டம் 9 (1)ஏ, 9 (பி)(1)(ஏ), வெடிபொருள் சட்டம் 3, 4(பி), 5 ஆகிய பிரிவுகளில் உப்பிலியாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இதனையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதையடுத்து வழக்கு குறித்த ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில் தசிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் பால்பாண்டி ,ஆய்வாளர் சிவா ,தலைமை காவலர் சிவராமன் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த வழக்கில் இருந்து 4 பேரை விடுவிக்க கோரி திருச்சி  முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர் அந்த மனு மீதான விசாரணை நீதிபதி செல்வம் முன்னிலையில் நடைபெற்றது .

அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும்  மனுதாரர் வழக்கறிஞர் மனோகரன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து இந்த வழக்கின்  விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM