துப்பாக்கிகளுடன் இணைத்து பயன்படுத்தும் நவீன கையெறி குண்டு லாஞ்சர் அறிமுகம்

துப்பாக்கிகளுடன் இணைத்து பயன்படுத்தும் நவீன கையெறி குண்டு லாஞ்சர் அறிமுகம்

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் திருச்சி அசால்ட்' மற்றும் ஏகே 47ரக துப்பாக்கிக்களுக்கான 40 × 46 மி.மீ நவீன கையெறி குண்டு லாஞ்சர் (UBGU) நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை மூலம் உருவாக்கப்பட்ட இந்த கையடக்க வாஞ்சர் 16 கிலோ எடை கொண்டது.

திருச்சி அசால்ட் துப்பாக்கி மற்றும் ஏகே 47ரக துப்பாக்கிகளுடன் இந்த லாஞ்சரை எளிதில் இணைத்து, எதிரி இலக்குகளை நோக்கி கையெறி குண்டுகளை வீசி அழிக்க முடியும்.

400 மீட்டர் தூரம் வரை கையெறி குண்டுகளை வீசும் திறனுடைய இந்த லாஞ்சர் ஒரு ஒற்றை ஷாட் ப்ரீச் லோடிங் லாஞ்சர் ஆகும். பல்வேறு வகை கையெறி குண்டுகளை பயன்படுத்துவன் மூலம் இதன் சக்தியை அதிகரிக்க முடியும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இவ்விரு துப்பாக்கிகளுடன் லாஞ்சரை இணைக்கவும், பிரிக்கவும் முடியும்.

இந்த லாஞ்சரை பயன்படுத்துவதன் மூலம் வீரர்கள் ஒரே நேரத்தில் துப்பாக்கி தோட்டாவை பயன்படுத் துவதோடு, கையெறி குண்டுகளையும் வீசி எதிரி படையி னரை அழிக்கவும், முன்னேறவிடாமல் தடுக்கவும் முடியும். புதிதாக உருவாக்கப்பட்ட இந்த நவீன லாஞ்சரை பொது மேலாளர் சஞ்சய் திவேதி அறிமுகப்படுத்தினார். இவ்ழாவில், கூடுதல் பொது மேலாளர்கள் ராஜீவ் ஜெயின், ஏ.கே.சிங், இணை பொது மேலாளர்கள் குணசேகரன், கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn