தரைக்கடை வியாபாரிகளுக்கு எல்லைகளை நிர்ணயிக்கும் திருச்சி மாநகராட்சி!!
பண்டிகை காலம் நெருங்குவதால் நகரின் முக்கியமான கடைவீதி பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். விழா கால கொண்டாட்டங்களுக்கு என பல பொருட்களை வாங்குவதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் வரும் நிலையில் வாகன நெரிசலும் ஏற்படும்.
இதனை சமாளிக்க நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு மற்றும் திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து நகரின் முக்கியமான மக்கள் நெரிசல் ஏற்பட கூடிய பகுதியான மலைக்கோட்டை, NSB ரோடு, பெரியகடைவீதி மற்றும் அவற்றிற்கு அருகில் உள்ள பகுதிகளில் எல்லைகளுக்கென கயிறுகளை அமைத்து அதற்குள்ளாகவே வியாபாரிகளை செயல்பட வேண்டும் என கூறியுள்ளனர்.
தீபாவளி சீசன் முழுவதும் இந்த எல்லைகள் பின்பற்றப்படும் என்றும், ஒதுக்கப்பட்ட இடத்தில் சாலையோரங்களில் இருந்து ஐந்து ஆதி தூரத்திற்குள் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் வியாபாரிகளிடம் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் என இருந்து வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision