திருச்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி வாழை மரம் நட்டு போராட்டம்

திருச்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி வாழை மரம் நட்டு போராட்டம்

திருச்சி மாநகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரவரி மூடப்படாமல் உள்ளதால், சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பாகுறிச்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை கோரியும், பாரதிதாசன் நகரில் பொதுப்பாதையில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், காட்டூர் பாரத் அவன்யூவிலிருந்து அண்ணாநகர் சாலை இணைப்பு பகுதியில் உள்ள சுவரை இடித்து விட்டு அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் அகற்றி பொது பாதையாக அமைத்து தரக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் கே.சி.பாண்டியன், ரேணுகா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து காட்டூர் பாப்பாக்குறிச்சி சாலையில் பேரணியாக வந்து வாழை மரங்களை நட்டு வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn