திருச்சியில் 15 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய ஏரி - மக்கள் பதற்றம்

திருச்சியில் 15 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய ஏரி - மக்கள் பதற்றம்

திருச்சி மாவட்டம் எதுமலை அருகே உள்ள பாலையூர் ஏரி 15 வருடங்களுக்கு பிறகு நிரம்பியுள்ளது. 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி வரதராஜபுரம் பகுதியில் இருந்து வரக்கூடிய வரத்து வாய்க்கால் மூலம் பெய்த மழையினால் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது நீர்வழிந்து வருகிறது. இந்த ஏரினால் 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறக்கூடியது.

தற்பொழுது எதுமலை, பாலையூர், எதுமலை தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் ஏரிநீர் சூழக்கூடிய  நிலை ஏற்பட்டுள்ளது. ஏரிநீர் வாய்க்காலில் வழிந்து ஓடி வருகிறது. ஊராட்சி மன்ற தலைவர் வீடுகளுக்குள்  நீர் புகாமல் இருப்பதற்கு ஜேசிபி வாகனங்களை வைத்து வாய்க்கால்களை ஆழப்படுத்தி நீர் செல்லும் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

15 வருடங்களுக்கு பிறகு ஏரி நிரம்பி கிராம மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தாலும், முழு கொள்ளளவை எட்டியதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் பதட்டத்துடன் இருக்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn