திருச்சி தனியார் கல்லூரி மாணவிகள் 40 பேர் வாந்தி - கேண்டீனுக்கு சீல்

திருச்சி தனியார் கல்லூரி மாணவிகள் 40 பேர்  வாந்தி - கேண்டீனுக்கு சீல்

திருச்சியில் கல்லூரி மாணவிகள் 27 மாணவிகள் குணமடைந்து திரும்பிய நிலையில், தற்போது 12 மாணவிகள் திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள தனியார் ( GVN ) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட, தனியார் (இந்திரா காந்தி) கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் கடந்த சனிக்கிழமை இரவு சப்பாத்தி சாப்பிட்டதாகவும், அன்றிலிருந்து அவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று உபாதை இருந்ததாகவும், நேற்று இரவு தோசை சாப்பிட்ட பிறகு மீண்டும் அது போல் இருந்ததால் திருச்சி சிங்காரத் தோப்பில் உள்ள தனியார் (GVN) மருத்துவமனையில் 15 மாணவிகளும், எஞ்சிய மாணவிகள் 12 பேர், திருச்சி பாபு ரோட்டில் உள்ள தனியார் ( GVN ) மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றனர்.

புறநோயாளியாகவும், உள்நோயாளியாகவும் சிகிச்சை பெற்ற 27 பேரும் இன்று காலை கல்லூரிக்கு திரும்பிய நிலையில், தற்போது புதிதாக பன்னிரண்டு மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சி தனியார் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், விடுதி உணவகத்தை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கேண்டீனை பூட்டி சீல் வைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision