சென்னையில் சீர்மிக நகர திட்டத்தில் ஒரு வடிகால் வாய்க்காலும் கட்டப்படவில்லை 800 கோடி ரூபாய் எங்கே செலவிட்டார்கள் என நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் .நேரு அதிமுகவிடம் கேள்வி
மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வினோபா நகர், சண்முகா நகர், லிங்கா நகர், பாத்திமா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், உய்யகொண்டான் ஆறு கரை உடைந்த பகுதிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரஹ்மான் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு... திருச்சி வயலூர் சாலை சண்முக நகர் குடியிருப்பு பகுதிகளில் உய்யகொண்டான் ஆற்றில் வரும் தண்ணீரை நேராக குடியிருப்பு பகுதிகளில் வந்துவிடுகிறது, இது வடிவதற்கு இடமில்லை. இரண்டு பகுதியிலும் கரையை பலப்படுத்த போகிறோம். இதேபோல் லிங்க நகரில் 50 கோடி ரூபாய் செலவில் கொடிங்கால் வாய்க்கால் மற்றும் கரையை பலப்படுத்த போகிறோம். பாத்திமா நகர், தியாகராய நகர் பகுதிகளில் ஒரு பகுதியில் கரையை இல்லாமல் இருக்கிறது கரையும் அமைக்கப் போகிறோம்.
திருச்சி மாவட்டத்தில் எங்கெங்கெல்லாம் கரை உடைந்து பலவீனமாக இருக்கிறதோ அந்த பகுதிகளில் கரையை பலப்படுத்த போகிறோம்.இனிமேல் மழை பெய்ததால் தான் திருச்சி மாவட்டத்தில் பாதிப்பு இருக்கும். விவசாயி பயிர்கள் மூழ்கி இருக்கிறது என்று விவசாயிகள் கூறியுள்ளனர் தமிழக முதல்வர் நிவாரணத்தை அறிவிப்பார் என்றார். வடிகால் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் போராட்டம் பண்ணுகிறார்கள், தண்ணீர் வரும் போது மட்டுமே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள் இது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. பாதிக்காத வகையில் வடிகால் அமைப்பை ஏற்படுத்தி வருகிறோம். எல்லா நீர்நிலைகளிலும் வீடுகளை கட்டிக் கொண்டு எங்களுக்கு சிரமம் கொடுக்கிறார்கள். வேறு வழி இல்லை அதை அவர்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியில் சரியாக ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. செய்ய தவறிவிட்டார்கள். மாநகராட்சியின் எவ்வித வளர்ச்சித் திட்டங்களின் செய்யவில்லை.
அடிப்படைப் பணிகளை செய்ய முடியல, செய்ய தெரியவும் இல்லை. சென்னையில் 3 இடங்களில் தண்ணீர் வடிவதற்கு முடியாமல் மோட்டார் வைத்து எடுத்து வருகிறோம்மெட்ரோ பாதாள சாக்கடை தண்ணீர், வாட்டர் குழாயும் மிகவும் சிறிய குழாய் ஆக உள்ளது. தமிழக முதல்வரிடம் இது குறித்து தெரிவித்து உள்ளோம். நிரந்தர நீரேற்று நிலையம் ஏற்பாடு செய்துள்ளோம். அண்ணா யுனிவர்சிட்டி, ஐஐடி உள்ள நிபுணர்களை வைத்து இந்தப் பணியைச் செய்கிறோம்.சென்னை மாநகர் முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டுமென்றால் நான்கு வருடம் ஆகும்.
29 இயந்திரங்கள் புதிதாக வாங்கி உள்ளோம். இதன்மூலம் மழைநீரை அகற்றுவதற்கு பயன்படுத்தி வருகிறோம். கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் சீர்மிகு நகர திட்டத்தில் எந்த ஒரு வாய்க்காலும் கட்டவில்லை, பள்ளி, கலையரங்கம், மல்டி லெவல் கார் பார்க்கிங், பூங்காக்கள் மட்டுமே செய்துள்ளனர்.முன்னாள் முதலமைச்சர் சீர்மிகு நகர திட்டத்தில் 800 கோடி ரூபாய் செலவு செய்து உள்ளேன் என்று கூறியுள்ளார். அவர் எந்த இடத்தில் செய்துள்ளார் என்று கேட்டால் அதற்கு சரியான பதில் இல்லை. அந்த இடத்தையும் காண்பிக்க மாட்டார்கள். இதில் தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் விசாரணை கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய...