தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதற்கு தீர்மானம்
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேரு போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம் தலைவர் பூவை விஸ்வநாதன் ஆதரவு தெரிவிப்பதாக பேட்டி.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்க கூட்டம் திருச்சி மாவட்டம் லால்குடி தனியார் திருமண மண்டபததில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார் நகர தலைவர் குணசீலன், ஒன்றிய துணைத் தலைவர் தங்கராஜ்,மாநில செய்தி தொடர்பாளர் அரவிந்த்சாமி, ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பெரம்பலூர் தொகுதிக்கு மட்டும் திமுக வேட்பாளர் அருண் நேருக்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆதரவு தெரிவித்து உதய சூரியன் சின்னத்திற்க்கு வாக்கு சேகரிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் விவசாய விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்து உறுதி செய்ய வேண்டும் மேற்கண்ட கோரிக்கைக்கு வாக்குறுதி தந்த திமுக வேட்பாளர் அருன் நேருக்கு ஆதரவு தெரிவிப்பதாக மாநில தலைவர் விஸ்வநாதன் கூறினார் கூட்டத்தில் லால்குடி ஒன்றிய அமைப்பாளர் சதாசிவம் வரவேற்று பேசினார். லால்குடி நகர துணை தலைவர் வரதராஜன் நன்றி கூறினார்.
இதனை தொடர்ச்சியாக தமிழக விவசாய சங்க தலைவர் பூவை விஸ்வநாதன் பேசியது. தி.மு.க. பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் K.N.அருண்நேரு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர்
கிராமங்கள் தோறும் சென்று வாக்கு சேகரித்து வெற்றி பெற செய்வோ தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மோடி அரசு கொண்டு வந்த புதிய மின்சார திருத்த சட்டத்தை இரத்து வேண்டும்.
விவசாய விளைப்பொருட்களுக்கும், இடு பொருட்களுக்கும் நீக்கப்படுதல் வேண்டும்.
இலால்குடியில் தண்ணீர்பந்தல் முதல் கிளிக்கூடு வரையில் கொள்ளிட குறுக்கே தடுப்பணையுடன் கூடிய தரைப்பாலம் கட்டித்தர வேண்டும்.
இலால்குடி தாலுக்காவில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். குளங்களையும், பாசன வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும்
இலால்குடியில் வாழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு வாழை ஏலச்சந்தை அமைக்க வேண்டும், குளிர்பதனக் கிடங்கு அமைத்து தர வேண்டு
திருச்சி மெயின்கார்டுகேட்டில் இருந்து இலால்குடி வரை இரவு பேருந்து. முறைப்படி விடுதல் வேண்டும்.
100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக நிர்ணயம் செய்ய வேண்டும் விவசாய காலத்தில் விவசாயத்திற்கு 150 நாட்கள் பணி வழங்க வேண்டும் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்க தலைவர் பூ வை விஸ்வநாதன் பேசினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://www.threads.net/@trichy_vision