சாட்டை துரைமுருகன் வந்த கார் எது? - விபத்து - சர்ச்சை

சாட்டை துரைமுருகன் வந்த கார் எது? - விபத்து - சர்ச்சை

நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போது நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆதரித்து பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த, சாட்டை துரைமுருகன் பேசினார். அதில் திமுக தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதி மற்றும் தமிழ்நாடு அரசை தரக்குறைவாக விமர்சித்ததாக புகார் எழுந்தது. இதனடிப்படையில் A.K. அருண் என்பவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகாரின்படி, திருநெல்வேலி வீராணம் பகுதியில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சாட்டை துறைமுருகனை திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது சாட்டை துரைமுருகனை அவரது வாகனத்திலேயே காவல்துறை திருச்சி அழைத்து வந்தாக தகவல் வெளியானது. மேலூர் சுங்கச்சாவடி அருகே வரும் போது பின்னால் வந்த லாரி இந்த காரின் மீது மோதியுள்ளது. அதிர்ஷ்டவசமாக காயமின்றி துரைமுருகன் தப்பினார் என நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அங்கிருந்து வேறு கார் மூலம் திருச்சி அழைத்து வந்துள்ளனர். 

இதே போன்று யூடிபர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து அழைத்து வரும்போது ஏற்பட்ட விபத்தை போலவே இப்போது சாட்டை துரைமுருகனுக்கு நடந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள்.