ஒரு கால் இல்லாத லாரி ஓட்டுநர் - கார் மீது மோதி விபத்து
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை சேர்ந்தவர் கந்தசாமியின் மகன் முருகேசன் (49). இவர் இன்று புள்ளம்பாடியில் இருந்து பைபாஸ் சாலையில் காரில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். அதேபோன்று சமயபுரம் பகுதியில் இருந்து திருச்சியை நோக்கி லாரியும் வந்து கொண்டிருந்தது கூத்தூர் மேம்பாலம் அருகே சென்ற போது காரின் பக்கவாட்டு பகுதியில் லாரி மோதியது.
இதனால் நிலை தடுமாறி தடுப்பு கட்டையின் மேல் கார் ஏறி நின்றது. இதில் கார் உரிமையாளரும், ஓட்டுனருமான முருகேசன் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து சம்பவம் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். அப்போது லாரி ஓட்டுநர் ஒரு கால் இல்லாமல் ஒட்டி வந்தது தெரியவந்தது.
ஒரு கால் இல்லாத லாரி ஓட்டுனருக்கு எப்படி போக்குவரத்து வட்டார அலுவலர்கள் ஓட்டுனர் உரிமம் கொடுத்தார்கள் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஓட்டுனர் உரிமம் பெரும்பொழுது அவருக்கு கால் நன்றாக இருந்திருதாலும், தற்போது ஒரு கால் இல்லாமல் இருப்பவரை எப்படி லாரியை இயக்க அதன் உரிமையாளர் எப்படி அனுமதி கொடுத்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision