திருச்சியில் கூவாகம் திருவிழா - பொங்கல் வைத்து வழிப்பட்ட மக்கள்

திருச்சியில் கூவாகம் திருவிழா - பொங்கல் வைத்து வழிப்பட்ட மக்கள்

விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டவருக்கு அடுத்த படியாக மிகவும் பிரபலமான திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டத்தில் தேனூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த மஹா பாரத கூத்தாண்ட அரவான் கோவில் இங்கு வருடந்தோறும் வைகாசி மாதத்தில் உற்சவ திருவிழா நடைபெறுகிறது. காரணம் இங்கு மூலவருக்கு சிலை கிடையாது.

உற்சவர் சிலை மட்டுமே அதுவும் தலை மட்டுமே கொண்டு திருவிழா நடத்தப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டு கடந்த வாரம் செவ்வாய்கிழமை சுவாமியிடம் குறி என்று சொல்ல கூடிய சகுணம் பெறப்பட்டு வெள்ளி கிழமை காப்பு கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து 3 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது அதன் வகையில் (04.6.2024)-செவ்வாய் கிழமை துவங்கி மாலை 07:00 மணியளவில் பொங்கல் வைக்கப்பட்ட பிறகு களிமண்ணால் செய்யப்பட்ட அரவானின் திருஉருவம் கொண்டுவரப்பட்டது.

பிறகு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. (05.6.2024) புதன்கிழமை காலையில் இருந்து மாலை 03:00 மணி வரை சுவாமிக்கு பொதுமக்கள் அர்ச்சனை செய்தும் நேர்த்தி கடன்களை செலுத்தினார். மாலை 03:30 மணியளவில் முக்கிய நிகழ்வுகளான தரம் குத்துதல் மற்றும் 06:00 மணியளவில் திருவீதி உலா நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு 10:09 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து மாவிளக்கு, முளைப்பாரி, வான வேடிக்கை மற்றும் பறை இசை முழங்க அரவானின் திரு உருவம் ஆலயத்தை வலம் வந்து ஆலயத்தின் பின்புறம் உள்ள குளத்தில் கரைக்கப்பட்பட்டது.

(06.6.2024) வியாழக்கிழமை காலை 11:00 மணியளவில் அரவானின் திரு ஆபரணங்கள் இசைக்கருவிகள் முழங்க அரவான் கோவில் பூசாரிகளுக்கு சொந்தமான கோவில் வீட்டை அடைந்தது பிறகு மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. இந்த திருவிழா தேனூர் ஊரார் இராம சுப்பிரமணிய கோனார் அவர்கள் தலைமையிலும் ஊர் பொதுமக்கள் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் 3 முக்கிய நாட்களில் பாரம்பரியம் மாறாமல் நாடக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision