திருச்சிக்கு வந்த முதலமைச்சரை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக முதலமைச்சர் சிவகங்கை மாவட்டம் செல்கிறார்.
முதல்வர் சுற்று பயண திட்டம் : சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலைகளும் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கவிஞர் முடியரசன் திருவுருவச் சிலையும் அமைத்திட அடிக்கல் நாட்டுகிறார். ரூ.50 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் திருவுருவச் சிலையைத் திறந்து வைக்கிறார். மேலும் சுற்றுப்பயணத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி என அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு நாளை(22.01.2024) மதியம் மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 2:40 மணியளவில் சென்னை திரும்பகிறார்.
திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த முதலமைச்சரை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், பெரிய கருப்பண், ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்டோரும் அரசு அதிகாரிகள் மற்றும் திமுகவினரும் வரவேற்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision