மனிதம் டிரஸ்ட் சார்பாக நடத்தப்பட்ட இன்பஒளி (2021) கொண்டாட்டம் மற்றும் 6-ம் ஆண்டு துவக்க விழா

மனிதம் டிரஸ்ட் சார்பாக நடத்தப்பட்ட இன்பஒளி (2021) கொண்டாட்டம் மற்றும் 6-ம் ஆண்டு துவக்க விழா

திருச்சி மனிதம் டிரஸ்ட் சார்பாக நடத்தப்பட்ட இன்பஒளி (2021) கொண்டாட்டம் மற்றும் 6-ம் ஆண்டு துவக்க விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பிஷப் ஹீபர் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவச் செல்வங்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இந்திரஜித், மனிதம் டிரஸ்ட் நிறுவனர் ரா.தினேஷ் குமார், செயலாளர் C.M.தாஸ், குழந்தைச் செல்வங்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn