திருச்சி கே.கே நகரில் மழைநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் - விரைந்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி கே.கே நகரில் மழைநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் - விரைந்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி மாநகராட்சி 35 வது வார்டு கே.கே.நகர் கக்கன் காலணி குடியிருப்போர் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சில தெருக்களில் மழைநீர் தேங்கி நடக்க முடியாத அளவுக்கு கிடக்கின்றது.

இரண்டு ஆண்டுகளாக இதுகுறித்து மாநகராட்சியிடம் புகார் அளித்தாலும் மாநகராட்சி பணியாளர்கள் பார்வையிட்டு செல்கின்றனரே தவிர அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

மேலும் தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் கொள்கின்றனர் அப்பகுதிவாசிகள்.

மழை நீர் தேங்கி இருப்பதால் சாலைகள் கடப்பதற்கு கூட பெரும் சிரமமாக உள்ளதாக கூறும் மக்கள் மாநகராட்சி உடனடியாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் பாதாள சாக்கடை பணிகளை தொடங்க வேண்டும்என்று மாநகராட்சிக்கு  கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn