இடிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்கள் நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்!!
திருச்சி மாவட்டம் தாராநல்லூர் பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம் சாலையில் உள்ள மின் கம்பங்கள் இரண்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் வசிக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள இந்த மின் கம்பங்கள் முழுவதும் துருப்பிடித்தும் சாய்ந்து விழும் நிலையிலும் உள்ளது.
இது சாய்ந்து விடாமல் இருக்க இரண்டு கம்பிகள் மூலம் முட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இவை எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், இவையிரண்டும் இடிந்து விழும் பட்சத்த்தில் இந்த மின்கம்பங்களுக்கு அருகில் உள்ள வீடுகளுக்கும், பொதுமக்களும் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்...... கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே இந்த இரண்டு மின் கம்பங்களும் சேதமடைந்த நிலையில் தான் உள்ளது. தற்போது இன்னும் மோசமாக உள்ள நிலையில், இவை ஆரம்பநிலையில் சேதமடைந்த பொழுதே வார்டு கவுன்சிலரிடம் புகாரளிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதைச் சரி செய்ய யாரும் முன் வரவில்லை என்றனர். மேலும் கடந்த மாதம் இந்த பகுதியின் MLA இனிகோ எஸ். இருதயராஜ் இந்த பகுதிக்கு வந்திருந்த பொழுது அவரிடமும் மக்கள் இதைச் சரிசெய்து தரும் படி கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து கவுன்சிலரிடம் நடவடிக்கை எடுக்க அவர் கூறிய நிலையில் இன்று வரை சரி செய்யப்படாத நிலையில் தான் உள்ளது. இது ஒரு வேலை திடீரென இடிந்து விழுந்தால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவோம். எங்கள் வீடுகளும் சேதமடையும். வழியில் செல்லும் யார் மீதாவது விழுந்தால் என்ன செய்வது என்று கேள்வியெழுப்பும் மக்கள் மழை பெய்துகொண்டிருக்கும் சூழலில் இந்த மின்கம்பங்கள் மேலும் அச்சத்தை ஏற்படுத்திக்கிறது.
இவை தானாக விழுந்து வீடுகளுக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் முன்பே இவற்றைச் சரி செய்தாக வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision