லால்குடி வட்டார விவசாயிகளுக்கு மூன்று நாள் திலேபியா மீன் வளர்ப்பு பயிற்சி

லால்குடி வட்டார விவசாயிகளுக்கு மூன்று நாள் திலேபியா மீன் வளர்ப்பு பயிற்சி வேளாண்மை அறிவியல் நிலையம் சிக்கல் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் நாகபட்டினம் நடைபெற்றது. இதில் மீன் வகைகள்,
நன்னீரில் இறால் வளர்ப்பு, மரபணு ரீதியாக மேம்படுத்த ப்பட்ட பண்ணை திலேபியா மீன் வளர்ப்பு, லாபகரமான பண்ண குட்டையில் மீன் வளர்ப்பு தீவன மேலாண்மை செய்தல் ,அசோலா வளர்ப்பு முறைகள் பற்றி முனைவர் ஹினோ ஃபெர்னாண்டஸ் விவசாயிகளுக்கு செயல் விளக்கத்துடன் விரிவாக விளக்கி கூறினார். மேலும் வெற்றிகரமாக பண்ணை
குட்டையில் சிகார் கிராமத்தில் ஆர்கே மீன் பண்ணை சென்று விவசாயிகளுக்கு நேரடியாக வளர்ப்பு முறைகள் பற்றி செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. மேலும் முனைவர் மதிவாணன் தொழில்நுட்ப வல்லுநர் (மனையியல்) அவர்கள் பேசுவையில் மீன் விற்பனை வாய்ப்பு முறைகள், மீனில் உள்ள புரத சத்து வகைகள்
தாது உப்புகள், பல்வேறு மீன் வகைகள் கருவாடு உற்பத்தி செய்தல், மாசி கருவாடு உற்பத்தி தொழில்நுட்பம், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களான ஃபிஷ் நூடுல்ஸ், ஊறுகாய், மீன் தொக்கு, மீன் குழம்பு, மீன் பிரட், பதப்படுத்தப்பட்ட மீன்கள் விற்பனை, மேலும் புதிய நவீன முறையில் அலங்கார மீன்கள் உற்பத்தி செய்தல் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக விளக்கக் கூறினார்.
மேலும் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் நாகப்பட்டினம் சென்று உவர் நீரில் மீன் வளர்ப்பு செயல் விளக்கத்திடல் சென்று கொடுவாய் மீன்கள் ,திலேபியா, இறால் வளர்ப்பு முறைகள் செயல் பக்கமாக மேலும் ஒருங்கிணைந்த பண்ணைமுறையில் ஆடு வளர்ப்பு கோழி வளர்ப்பு மீன் வளர்ப்பு பண்ணை குட்டையில் விவசாயிகளுக்கு பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து முனைவர் ஹினோ பெர்னாண்டஸ் அனைத்துவித நவீன தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி மேலும் இப்பயிற்சிக்கான ஏற்பாட்டின
லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி சத்தியப்பிரியா, உதவி வேளாண்மை அலுவலர்கள் விஸ்வநாதன்,சந்திரசேகர், ராஜசேகரன்,எடிசன், கவிதா, பிரவீன் மற்றும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு சபரி செல்வன், உதவி தொழில் நுட்ப மேலாளர் திரு கார்த்திக் ஆகியோர் செய்து
பயிற்சியில் லால்குடி வட்டாரம் நத்த மாங்குடி, கோமக்குடி,கூகூர், எல். அபிஷேகபுரம் இடையாற்று மங்கலம், தச்சன்குறிச்சி, நெய்குப்பை கிராமத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision