துறையூர் அருகே சூறைக்காற்றில் வாழை மரங்கள் சேதம் -விவசாயிகள் கவலை

துறையூர் அருகே சூறைக்காற்றில் வாழை மரங்கள் சேதம் விவசாயிகள் கவலை.திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏரகுடி ஊராட்சியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை மரங்களை பயிரிட்டுள்ளனர் தற்போது வாழைத்தார்கள்
வெட்டும் தருவாயில் உள்ள நிலையில் நேற்று அடித்த சூறாவளி காற்றின் காரணமாக சுமார் 15,000 வாழை வாழை மரங்கள் தாருடன் சாய்ந்தன இதனால் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கவலையுடன் தெரிவித்துள்ளனர்
எனவே தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு பயிர் சேதத்தை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கி தங்களது வாழ்வாதாரத்தை காத்திட வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision