தமிழ்நாடு துணை முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ள புதிய ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்தார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டானது ஜல்லிக்கட்டு தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூர் பாலமேடு என் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுக்கு போட்டிகளுக்கு அடுத்தபடியாக நடைபெறுவது திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டாகும்
ஆண்டுதோறும் தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் அன்று மிகவும் எழுச்சியாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு விழாவை திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், உட்பட பல அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து சுமார் 5,000-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொள்வது வழக்கம்
இந்நிலையில் இப்பகுதியில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் ஒன்று அமைத்து தர வேண்டுமென திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் சூரியூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையை அடுத்து புதிய ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக தமிழக அரசானது கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதற்கான அரசாணை வெளியிட்டது இந்நிலையில் வரும் 19ஆம் தேதி ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதாத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு தமிழக துணை முதல்வர் வருகை தருவதையெட்டி ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் நடைபெறும் இடத்தினை இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார், மேலும் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்றும் கேட்டறிந்தார் மேலும் இந்நிகழ்வில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், உதயகுமார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம் உட்பட பலர் உடன் இருந்தனர்