திருச்சி திருநங்கை ரியானா 2ம் இடம்

திருச்சி திருநங்கை ரியானா 2ம் இடம்

மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் 2023 என்ற தலைப்பில் திருநங்கைகளுக்கான பிரபஞ்ச அழகி போட்டி டெல்லியில் கடந்த 2ம் தேதி தொடங்கி 4ந் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா, பிரேசில், இந்தோனேசியா, வியட்நாம், கம்போடியா, மொரிஷியஸ் உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து மொத்தம் 12 திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

இதில் பிரேசல் நாட்டை சேர்ந்த திருநங்கைக்கு பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றார். ரன்னர் அப் என்று கூறப்படும் 2வது இடத்துக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், திருச்சி ரியானாவும் ஒருவர்.

இவர் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியை சேர்ந்த திருநங்கை ரியானா (26). எம்எஸ்சி பட்டம் பெற்றுள்ளார். நடனத்தில் டிப்ளமோ முடித்து உள்ளார். மேலும் மாவட்ட மற்றும் மாநில அளவிலான திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் வெற்றி பெற்ற ரியானா கடந்த ஏப்ரல் மாதம் 'மிஸ் இந்தியா' போட்டியில் பங்கேற்று மிஸ்டேலண்ட் பட்டத்தை பெற்றார்.

திருநங்கையர் அழகி போட்டிகளுக்கான தென்னிந்திய தூதுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision