தேசியக் கல்லூரி நூலகத்துறை வேலைவாய்ப்பு பயிற்சி நிறைவு விழா

தேசியக் கல்லூரி நூலகத்துறை வேலைவாய்ப்பு பயிற்சி நிறைவு விழா

திருசச்சி தேசியக்கல்லூரியின் நூலகவியல் துறையில் “நூலக வேலைவாய்ப்புப் பயிற்சிப் பட்டறை” நிறைவு விழா நடைப்பெற்றது. திருச்சி ஸ்ரீமத் ஆணட் வன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை நூலகம் மற்றும் தகவியல் துறை மாணாக்கர்கள் 4 பேர் இப்பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்றனர்.

இப்பயிற்சி (04.09.2023) முதல் (08.09.2023) வரை ஓரு வார காலமும் நடைபெற்றது. மேலும் இப்பயிற்சியில் நூலக மேலாண்மை, நூலகப் பகுப்பாய்வு, நூலக செயல்பாடு, புதிய உத்திகள் மற்றும் நூலகத்தில் கணினி பயிற்சி மேம்பாடு குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. இப்பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழா (08.09.2023) நேற்று நடைபெற்றது. தேசிய கல்லூரியின் செயலர் அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்று பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

மேலும் புது வாழ்க்கையைத் தேடுபவர்களுக்கு நூலகமே சிறந்த வழி என்றும் அறிவார்ந்த சமுதாயம் நூலகத்தால் மட்டுமே சாத்தியப்படும் என்று பொருள்பட சிறப்புரையாற்றினார். முதல்வர் முனைவர் க.குமார் விழாவில் பங்கேற்று வாழ்த்துறை வழங்கினார். கல்லூரியின் பயிற்சிப்பட்டறையின் ஒருங்கிணைப்பாளரும், நூலகவியல் துறைத்தலைவருமாகிய முனைவர் த. சுரேஷ்குமார் நன்றியுரை நல்கினார்.

துணை முதல்வர் முனைவர் பிராசன்னா பாலாஜி மற்றும் பேராசிரியர்களும் நூலக உதவி நூலகர் ராதா ஜெயலெட்சுமி, நூலக உதவியாளர்கள் லெட்சுமணன், கலியமூர்த்தி, உமா மகேஷ்வரி, ஹரிஹரான், தட்டச்சு பயிற்சியாளர் அனபுமணி மற்றும் மாணவ - மாணவிகளும் விழாவில் திரளாகப் பங்கேற்றனர்.