சர்வதேச இளைஞர் தினம் - விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

சர்வதேச இளைஞர் தினம் - விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு நாட்டில் தூண்களான இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும், அவர்கள் திறன்களை வெளிப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஏதுவாக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி அண்ணா விளையாட்டு அரங்கம் வரையிலான 5 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று ஓடினர். முன்னதாக மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆடவர் பிரிவில் முதலாவது இடத்தை தேசிய கல்லூரியை சேர்ந்த கார்த்தியும், இரண்டாவது இடத்தை புனித வளனார் கல்லூரியைச் சேர்ந்த தாராகாந்த் ஆகியோர் தக்க வைத்துக் கொண்டனர். இதேபோன்று மகளிர் பிரிவில் முதல் இடத்தை சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கீதாஞ்சலியும், இரண்டாவது இடத்தை தேசிய கல்லூரியைச் சேர்ந்த மாணவி சுருதியும் தக்கவைத்துக் கொண்டனர். 

முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு தலா 10000, 7000 மற்றும் 5000 ரூபாய் மற்றும் ஆறுதல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் லட்சுமி துணை இயக்குனர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision