இந்திய அளவில் விரைவில் மிகப்பெரிய வேலை நிறுத்த போராட்டம் - மாநில தலைவர் பேட்டி

இந்திய அளவில் விரைவில் மிகப்பெரிய வேலை நிறுத்த போராட்டம் - மாநில தலைவர் பேட்டி

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்க சார்பில் திருச்சி மாவட்ட கிளை அலுவலகம் திறப்பு விழா, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா மாநில தலைவர் பத்மராஜ் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாரதிய ஓட்டுநர்கள் போக்குவரத்து கூட்டமைப்பு கமிட்டி அகில இந்திய தலைவர் பாபா காம்பளே செய்தியாளர்களிடம் கூறியதாவது... இந்தியா முழுவதும் 25 கோடி ஓட்டுநர்கள் உள்ளனர். இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளில் ஓட்டுநர்களுக்கு போதிய ஓய்வறை, கழிவறை, பாதுகாப்பு ஆகிய வசதிகள் இல்லாத நிலை உள்ளது.

ஓட்டுநர்களுக்கென அரசு நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் விரைவில் நடத்தவுள்ளோம் என கூறினார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சல பிரதேசம், சிம்லா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், புதுடில்லி உள்ளிட்ட 17 மாநிலங்களிலிருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் 750க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision