திருச்சி மாவட்டத்தில் 320 மையங்களில் 94,140 நபர்கள் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி IV -ல் அடங்கிய பல்வேறு பதவிக்கான போட்டி தேர்வு இன்று தமிழக முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் 12 30 மணி வரை நடைபெறும் இத்தேர்வை, திருச்சி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் 320 தேர்வு மையங்களில் 94,140 நபர்கள் எழுத உள்ளனர்.
இப்பணிகளுக்கு என 320 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 93 இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவிற்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர், ஆயுதம் ஏந்திய ஒரு காவலர் ஆகியோர் உள்ளனர்.
தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு செய்ய துணை ஆட்சியர் நிலையில் 12 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேர்வை கண்காணிக்கும் பொருட்டு 320 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை பதிவு செய்திட வீடியோகிராபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தேர்வு
எழுத வரும் தேர்வாளர்கள் செல்லிடை பேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களையும் தேர்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை என்றும், கோவிட் நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO