மனித கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை சம்பந்தமாக AHTU உடன் ஒருங்கிணைப்பு கூட்டம்

மனித கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை சம்பந்தமாக AHTU உடன் ஒருங்கிணைப்பு கூட்டம்

தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் ஜிஎம் ஈஸ்வர ராவ், உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Dr. அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில்

திருச்சி RPF இன்ஸ்பெக்டர் K. P. செபாஸ்டியன் தலைமையில், திருச்சி ஜங்ஷனில் நதாஷா மாலிம், மாநில ஒருங்கிணைப்பாளர், பிபிஏ, தமிழ்நாடு, தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சியை நடத்தினார்.

குழந்தை கடத்தல், குழந்தை தொழிலாளர்கள், குழந்தை பாலியல் துன்புறுத்தல் மற்றும் JJ சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், குழந்தை தொழிலாளர் சட்டம், POCSO சட்டம், குழந்தை மீட்பு மற்றும் மறுவாழ்வு, குழந்தை கடத்தலைத் தடுக்கவும், குழந்தை மீட்பு மற்றும் மறுவாழ்வை மேம்படுத்துவது போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.

கெளரவ விருந்தினர்கள் ராகுல் காந்தி, DCPO/திருச்சி மாவட்டம் மற்றும் ஜோதி லட்சுமி /WSI/AAHT/TN காவல்துறை. இன்ஸ்பெக்டர்/GRP/TPJ, இன்ஸ்பெக்டர்/CIB, இன்ஸ்பெக்டர்/NGT, இன்ஸ்பெக்டர்/TJ, SIPF/PDY, SOs மற்றும் TPJ பிரிவின் ஊழியர்கள், GRP, குழந்தைகள் உதவி மையத்தின் ஊழியர்கள் மற்றும் TPJ பிரிவின் வணிகத் துறை ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision