மர்மமான முறையில் உயிரிழந்த 3 சினை மாடுகள் - வழக்கு பதிவு
திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சின்னத்தம்பி, செந்தில், தங்கராசு. கூலி தொழிலாளியான இவர்கள் சொந்தமாக தலா ஒரு பசுமாடு விதம் 3 பசு மாடுகள் வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் வழக்கம்போல் மேய்ச்சலுக்கு மாடுகள் சென்றன. பின்னர் அவை வீடு திரும்பவில்லை இரவு முழுவதும் தேடி மாடுகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து ஊருக்கு அருகில் உள்ள வயல்வெளியில் அந்த மாடுகள் வாயில் நுரை தள்ளிய நிலையில் ஆங்காங்கே இறந்து கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை கட்டிப்பிடித்து அழுது அழுதனர்.
இது குறித்து மாடுகளின் உரிமையாளர்கள் கொள்ளிடம் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் இறந்த பசுக்களை பார்வையிட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வயல்வெளியில் தெளிக்கப்பட்டிருந்த ஏதோ ஒரு வகை மருந்தை மாடுகள் தின்றிருக்கலாம் என்றும், மாடுகளுக்கு யாராவது விஷம் கொடுத்தார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த 3 மாடுகளும் சினையாக இருந்ததால் மாட்டின் உரிமையாளர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn