திருச்சி கேள்விகளை மட்டும் என்னிடம் கேளுங்கள் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
திருச்சி முக்கொம்பு மேலணையில் 387.60 கோடி மதிப்பீட்டில் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது - ஏறத்தாழ 95% பணிகள் நிறைவு பெற்றுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை மற்றும் புதிய பாலத்திற்கான பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும்போது.... ஜூன் 26 தமிழக முதல்வர் திருச்சி வருகை தந்து காலை 11 மணி அளவில் புதிதாக கட்டப்பட்ட முக்கொம்பு கொள்ளிடம் மேலனை பாலத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளார். கடந்த 2018ம் ஆண்டு இந்த பாலம் கட்ட திட்டமிடப்பட்டு தற்போது 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இந்த புதிய பாலம் பழைய பாலம் போலவே குறுகலான பாலமாக திட்டமிடப்பட்டுள்ளது. கலைஞர் மாயனூர் பாலத்தை கட்டியபோது இருவழிப் பாதையாக இருக்கும் வகையில் கட்டினார். ஆனால் இது குறுகளாக ஒரு வழிப்பாதையாக தான் உள்ளது. அதே நேரம் இந்த பாலத்தில் மேலும் சில புதிய விஷயங்களை கொண்டுவர உள்ளோம். அதை முதல்வர் தெரிவிப்பார்.
திருச்சியில் புதிய காவிரி பாலம் கட்ட ஏற்கனவே 90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது தற்போது 130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது - திருச்சி நகரின் காவிரி ஆற்றில் புதிய பாலம் மற்றும் எக்பிரஸ் எலிவேட்டர் - வே உள்ளிட்ட திட்டங்கள் விரைவில் துவக்கப்படும்.
மேகதாது புதிய அணை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு : நான் திருச்சிக்கு தான் மந்திரி என்னிடம் திருச்சி கேள்விகளை மட்டும் கேளுங்கள் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO