40 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கபட்ட ஸ்ரீரங்கம் கோயிலின் பில்வ தீர்த்த குளம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் நவ தீர்த்த குளங்களில் ஒன்றான பில்வ தீர்த்த குளம் (திருவானைக் கோயில் வெங்கடேஸ்வரா திரையரங்கம் பின்பு உள்ளது ) சுமார் 40 ஆண்டுகளாக மிகவும் சிதிலம்மடைந்த நிலையில் இருந்தது.
இதை கவனத்தில் கொண்ட ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் அதை மிக விரைவாக அதை சீர் செய்தது , 27.03.2021 சனிக்கிழமை காலை 11 மணியளவில் ஆதிபிரமோட்சவம் பங்குனி 8ம் திருநாள் ஆன இன்று ஸ்ரீநம்பெருமாளுக்கு புதிதாக சீர் செய்யபட்ட பில்வ தீர்த குளத்தில் தீர்தவாரி நடைபெற்றது .
இதில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து , அறங்காவலர்கள் டாக்டர் சீனிவாசன் ,ரங்காச்சாரி , கவிதா ஜெகதீன் , அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர் .
40 ஆண்டுகளுக்கு பிறகு தீர்தவாரியை கண்ட பக்தர்களும் பொதுமக்களும் மகிழ்ந்து கோயில் நிர்வாகத்தை வெகுவாக பாரட்டிச் சென்றனர் .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW