திருச்சி கல்லூரி முன்னாள் மாணவர்கள் லண்டனில் சந்திப்பு - நெகிழ்ச்சி

திருச்சி கல்லூரி முன்னாள் மாணவர்கள் லண்டனில் சந்திப்பு - நெகிழ்ச்சி

கொங்குநாடு பொறியியல் கல்லூரியின் சார்பாக, கல்லுரியில் 2007 முதல் 2024 வரையிலான நாட்களில் கல்வி பயின்ற மாணவ, மாணவியர்கள் பல ஆண்டுகளுக்கு பின் முதன் முதலாக லண்டனில் ஒன்று சேர்ந்த நிகழ்ச்சி நடந்தது. மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாக நடைபெற்ற இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல ஆண்டுகளுக்கு முந்தைய நட்புக்காக கடல் கடந்து பல நண்பர்கள் வந்திருந்தனர்.

லண்டன் Chapter 2024 என்ற பெயரில் இந்த சந்திப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அனைவரது கவனத்தியும் ஈர்த்தது. லண்டன் chapter ன் நோக்கம் என்னவெனில் இதன் மூலம் பிற்காலத்தில் வரும் கொங்குநாடு மாணவ மாணவியர்களுக்கு மேற்படிப்பு மேற்கொள்ளும் விதம் மற்றும் அதற்கான இயல் சூழ்நிகளை அறிந்து கொள்ளுதல் ஆகியவற்றிற்கான உதவிகளை செய்வதாகும்.

முன்னாள் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கொங்குநாடு கல்வி குழுமத்தின் சேர்மன் Dr. PSK R பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார். முன்னாள் மாணவ, மாணவியர்கள் சேர்மன் அவர்களுக்கு பூங்கொத்து அளித்து மரியாதை செலுத்தினார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் படித்த தருணத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும், தாங்கள் தற்போது பணியாற்றி வரும் நிறுவனங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நண்பர்கள் ஒருவருக்கொருவர் பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சந்திப்பு நிகழ்ச்சிக்காக கடல் கடந்து கல்லூரியின் சேர்மன் மற்றும் நிர்வாகத்தினர் வந்தது முன்னாள் மாணவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கூட்டம் லண்டனில் நடத்தப்பட்டு, புதிய மாணவ, மாணவியர்களுக்கு இங்குள்ள கல்லூரிகளின் சிறப்பம்சம் குறித்து எடுத்துரைத்தல், வேலை செய்து கொண்டு படிக்க தேவையான உதவிகளை செய்தல் மற்றும் ஒவ்வொருவருக்கும் தேவையான தார்மீக ஆதரவு அளித்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் நமது பராம்பரிய எண்ணமான சமூக சேவைகளை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. முன்னாள் மாணவர்களில் குறிப்பிட்ட சிலர் உயர்ந்த பொறுப்புகளில் உள்ளனர். அவர்களும் தங்களால் முடிந்த அனைத்து வழிகாட்டுதலையும் இங்கு வரும் நமது மாணவ மாணவியர்களுக்கு வழங்க நல் எண்ணத்துடன் இருப்பதை சுட்டிக்காட்டினர். இதில் பங்கேற்ற அனைவரும் கல்லூரி காலத்தில் சேர்ந்து படித்த நண்பர்களை பல ஆண்டுகள் கழித்து சந்தித்தது தங்களது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் என கூறினர்.

நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவியும், கைகளை பற்றி கொண்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை அடுத்து, அனைவரும் ஒன்றாக குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பல ஆண்டுகளுக்கு படித்த பொறியியல் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தியது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இறுதியாக அனைவர்க்கும் லண்டனில் உள்ள நட்சத்திர அந்தஸ்து பெற்ற ராயல் நவாப் ஹோட்டலில் அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை லண்டன்- ல் வசிக்கும் முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்லூரியின் நிர்வாகம் இணைந்து செய்துருந்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision