உய்யக்கொண்டான் வாய்க்காலில் புதிய பாலம்- கொள்ளிடம்பாலத்தின் இரும்புதூண்களை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கொள்ளிடம் பழைய பாலத்தின் இரும்புத்தூண் பாகங்களை உய்யக்கொண்டான் வாய்க்காலில் பாலம் அமைக்க பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
1928 ல் கட்டப்பட்ட கொள்ளிடம் பாலமானது வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும். பாலம் சேதமடைந்ததை தொடர்ந்து 2014 முதல் வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டது
2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் சேதம் அடைந்தது, அதேப்போன்று கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு தூண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் புதிய பாலத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக தற்போது கொள்ளிடத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இரும்பு பாலத்தின் பாகங்கள் உடைக்கப்பட்டு வருகின்றன.
பழைய கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் உள்ள இரும்பு தூண்கள் அதில் உள்ள வேலைப்பாடுகள் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடியது.பாரம்பரியத்தை காத்து உய்யக்கொண்டான் வாய்க்காலின் குறுக்கே இதனை அமைத்தால் கொள்ளிடம் பாலத்தின் வரலாற்று பாரம்பரிய பதிவுகள் கொண்ட அருங்காட்சியகத்தை அமைத்து பொதுமக்கள் உய்யக்கொண்டான் வாய்க்காலில் குறுக்கே நடைபாதையாக பயன்படுத்த நடவடிக்கை எடுத்தால் மேலும் மாநகர் அழகுபெறும்.எனவே
வரலாற்றுச் சின்னமாக உய்யக்கொண்டான் வாய்க்காலில் அமைக்கவும் சிட்டிசன் உய்யக்கொண்டான் அமைப்பு குழுவினர் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து பேசிய போது...
உய்யக்கொண்டான் வாய்க்காலின் அகலம் 32 மீட்டர் உள்ளது. சில இடங்களில் 28 மீட்டர் உள்ளது. அப்பகுதியில் இந்த பழைய கொள்ளிடம் பாலத்தில் இடித்துதெடுக்கப்படும் இரும்பு தூண்களை வாய்க்கால் குறுக்கே அமைப்பதற்கான ஆலோசனையும் நடத்தியுள்ளோம். விரைவில் அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிட்டிசன் உய்யக்கொண்டான் அமைப்பு குழுவினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை மாநகராட்சி உள்ளிட்ட துறைகளை அழைத்து ஆட்சிய பிரதீப் குமார் தலைமையில் கலந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே இவர்கள் ஆறு இடங்களில் இந்த இரும்பு தூண்களை அமைக்க வேண்டுகோள் விடுத்தனர். ஆட்சியர் தற்போது இரண்டு இடங்களில் கொள்ளிடம் பழைய பாலத்தில் இடிக்கப்படும் இரும்பு தூண்களை உய்யக் கொண்டான் வாய்க்கால் பகுதியில் வைத்து அழகு படுத்த அனுமதி அளித்து உத்தரவும் பிறப்பித்துள்ளார் .
இன்று கூட்டம் நடைபெற்று சிட்டிசன் உய்யக்கொண்டான் அமைப்பினருக்கு மகிழ்ச்சிகரமான தகவலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு இந்த அமைப்பில் உள்ள விஜயகுமார் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn